எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சி : இங்கிலாந்து மலையேற்ற வீரர் மரணம்

நேபாளத்தில் உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் ஏராளமானோர் மலையேறுவது வழக்கம்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சி : இங்கிலாந்து மலையேற்ற வீரர் மரணம்
x
நேபாளத்தில் உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் ஏராளமானோர் மலையேறுவது வழக்கம். இந்தாண்டு நேபாள அரசு, 381 பேருக்கு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் ரோபின் ஹேனஸ் பிஷ்ஷர், மலையேறும் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தார். இதன்மூலம், இந்த சீசனில் வெளிநாடுகளைச் சேர்ந்த 8 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று நடுவழியில் உயிரிழந்துள்ளனர். இதுதவிர மலையேறச் சென்று காணாமல் போனவர்கள் என உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்