"தற்போதைய பதற்ற நிலைக்கு அரசாங்கம் தான் காரணம்" - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கருத்து

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்ற நிலைக்கு இலங்கை அரசாங்கம் தான் காரணம் என வன்னி மாவட்டத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.
தற்போதைய பதற்ற நிலைக்கு அரசாங்கம் தான் காரணம் - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கருத்து
x
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்ற நிலைக்கு இலங்கை அரசாங்கம் தான் காரணம் என வன்னி மாவட்டத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். அத்துடன் ராணுவத்தினரின் தற்போதைய நடவடிக்கை, தமிழ் மக்கள், பள்ளிக்கூட மாணவர்கள் மத்தியிலும் பீதியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.பிரபாகரனின் படத்தை வைத்திருந்ததாக யாழ்ப்பாண பல்கலைக் கழக தமிழ் மாணவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அதேநேரத்தில், ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட கனகராயன் குளம் தாவூத் உணவக உரிமையாளர், சிறையில் சகல வசதிகளுடன் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். முல்லைத்தீவு - குமுழ முனை பகுதியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்தகைய ஒரு குற்ற நிலை மற்றும் பதற்றமான பயங்கரவாத நிலைக்கு, இலங்கை அரசு தான் பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்