இலங்கையை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்புகள் - செப்பு தொழிற்சாலையில் வெடி குண்டுகள் தயாரிப்பு

இலங்கையை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் அந்நாட்டில் உள்ள செப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கையை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்புகள் - செப்பு தொழிற்சாலையில் வெடி குண்டுகள் தயாரிப்பு
x
இலங்கையை உலுக்கிய  தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் அந்நாட்டில் உள்ள செப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உலகையே உலுக்கிய இலங்கை  தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த தாக்குலில் தொடர்புடைய தீவிரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில இலங்கை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில்  தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் அந்நாட்டில் உள்ள செப்பு தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. 

கொழும்பு வெல்லம்பிட்டி பகுதியில் உள்ள அந்த செப்பு தொழிற்சாலை, குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தற்கொலைப்படை  தீவிரவாதிக்கு சொந்தமானது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த தொழிற்சாலையை சுற்றி வளைத்த  இலங்கை போலீசார் அங்கிருந்த  9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து இலங்கையில் ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்