"இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' என்னை கொலை செய்ய முயற்சித்தது" - இலங்கை அதிபர் சிறிசேன

இந்திய அரசின் உளவு நிறுவனமான 'ரா', தன்னை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக, இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது
இந்தியாவின் உளவு அமைப்பான ரா என்னை கொலை செய்ய முயற்சித்தது - இலங்கை அதிபர் சிறிசேன
x
இந்திய அரசின் உளவு நிறுவனமான 'ரா', தன்னை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக, இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய சிறிசேன, தன்னை கொலை செய்ய, கடந்த மாதத்தில் முயற்சி நடைபெற்றதாகவும், 'ரா' அமைப்பின் சதித் திட்டம் குறித்து, பிரதமர் மோடிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் பேசியதாக இலங்கை நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை பிரதமா் ரணில் விக்ரமசிங்கே அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரவுள்ள நிலையில், அதிபர் சிறிசேனவின் இந்தக் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்