தேவர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை - துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர்கள் பங்கேற்பு

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
x
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த தேவரின் உருவப்படத்திற்கு, முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தேவர் ஜெயந்தி நிகழ்வையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

"சாதி பாகுபாடுகளை கடுமையாக எதிர்த்தவர்" - முத்துராமலிங்க தேவரை நினைவுகூர்ந்தார் முதல்வர் 

சாதிய பாகுபாடுகளை கடுமையாக எதிர்த்தவர் முத்துராமலிங்க தேவர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முத்துராமலிங்க தேவரின் 113-வது ஜெயந்தியையொட்டி, டுவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், தேசிய ராணுவத்திற்கு தமிழகத்தில் இருந்து பெரும் படையைத் திரட்டி, சுதந்திர வேட்கையை தமிழகத்தில் விதைத்தவர் என்றும் பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்