கொரோனாவால் உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் -ஓட்டேரியில் உள்ள மயானத்தில் உடல் தகனம்

கொரோனாவால் உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ- வும் அமமுக பொருளாளருமான வெற்றிவேலில் உடல் தகனம் செய்யப்பட்டது. ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டபோது, அவரின் மனைவி கொரோனா தனிமைப்படுத்தலால் வீட்டு மாடியில் இருந்தவாறே கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.
x
கடந்த 6ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெற்றிவேல், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கொரோனா வழிகாட்டு விதிமுறைகளின்படி, சுகாதார துறை அதிகாரிகளிடம் வெற்றிவேலின் உடல் ஒப்படைக்கப்பட்டது. வாகனம் மூலம்  மருத்துவமனையில் இருந்து வெற்றிவேலின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்ட உடல் வாகனத்தில் இருந்த நிலையிலேயே, உறவினர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது. கொரோனா தனிமைப்படுத்தலில் இருக்கும் வெற்றிவேலின் மனைவி, வீட்டின் மாடியில் இருந்தவாறே கதறி அழுதார். 


Next Story

மேலும் செய்திகள்