அதிமுக எம்.எல்.ஏக்கள் 6ம் தேதி சென்னை வர உத்தரவு - 7ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

வரும் 6ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை வர கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
x
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், தொடர்ந்து குழப்பம் நீடித்து வரும் நிலையில், வரும் 7ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் 6ஆம் தேதி எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை வர அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து தனித்தனியாக ஆலோசனை நடத்தி வரும் நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  


Next Story

மேலும் செய்திகள்