தொழிலாளர் சீர்திருத்த மசோதாக்கள்: "நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயரும்" - மக்களவையில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் புகழாரம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் சீர்திருத்த மசோதாக்கள் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயரும் என்று அதிமுக எம்பி ரவீந்திரநாத் புகழாரம் சூட்டினார்.
தொழிலாளர் சீர்திருத்த மசோதாக்கள்: நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயரும் - மக்களவையில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் புகழாரம்
x
மக்களவையில் தொழிலாளர் நலச்சட்டங்கள் தொடர்பான 3 மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. விவாதத்தில் மசோதாவை ஆதரித்துப் பேசிய அதிமுகஉறுப்பினர் ரவீந்திரநாத், தொழிலாளர்களுக்கு
பணிப் பாதுகாப்பு அளிக்கும் 3 தொழிலாளர் மசோதாக்களை கொண்டு வந்ததற்காகமத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.இந்த மசோதாவின் கீழ் வேலை வழங்கும் எந்தவொரு நிறுவனமும் கட்டாயம் பணி நியமன ஆணை வழங்க வழிவகை செய்வது வேலைவாய்ப்புத் துறையில் நிச்சயம் ஒழுங்கு முறையை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். மேலும், இந்த மசோதா நாட்டின் ஜிடிபி வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார். தமிழகத்தில் சினிமா துறையில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக குறிப்பிட்ட ரவீந்திர நாத், ஒப்பந்த தொழிலாளர்களுக்கான தொழில் பாதுகாப்பு விதிகளை தனியே வரையறை செய்து வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்