இ-பாஸ் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலி - திருநள்ளாறில் குவிந்த வெளிமாநில பக்தர்கள்

இ பாஸ் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக, திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.
x
தமிழகத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. இன்று சனிக்கிழமை என்பதால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கோயில் நுழைவாயிலில் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்து, கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தம் செய்த பிறகு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். உரிய சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தை தொடர்ந்து, திருநள்ளாறில், கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்