கரூரில் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால் மக்கள் அவதி

கரூர் பகுதி பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், வேலைக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் தவித்துள்ளனர்.
x
ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்தால் முடங்கியிருந்த தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதால், தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல ஆயத்தமாயினர். கரூரில், கொசுவலை தயாரிப்பு மற்றும் ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள், நீண்டநேரம் காத்திருந்தும் பேருந்து கிடைக்காமல் தவிக்கின்றனர். பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சமூக இடைவெளி இன்றி, படிக்கட்டுகளில் தொங்கிச் செல்லும் நிலை உள்ளதால், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.100 சதவிகித தொழிற்சாலைகள் இயங்க அனுமதித்த அரசு, 100 சதவிகித பேருந்துகளையும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்