பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

கீழ்பவானி மற்றும் சென்னசமுத்திரம் கால்வாய் பகுதி பாசனத்திற்காக, பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
x
கீழ்பவானி மற்றும் சென்னசமுத்திரம் கால்வாய் பகுதி பாசனத்திற்காக, பவானிசாகர் அணையில் இருந்து  தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் மதகுகளை திறந்து வைத்து சீறிப்பாய்ந்த தண்ணீரில் மலர் தூவினர். இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்