சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் உயிரிழப்பு

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கொரோனாவால் மரணமடைந்துள்ளார்
x
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை கைது செய்யப்பட்டிருந்தார். மதுரை மத்திய சிறையில் இருந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரது மனைவி  மங்கையர் திலகம் தமது  கணவருக்கு தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்க அனுமதி கோரி  மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். இந்நிலையில் பால்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே தமது கணவருக்கும் வழக்கிற்கும் தொடர்பு இல்லை என அறிவிக்கும் வரை உடலை பெறப்போவதில்லை என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்