"அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரியில் அதி கனமழை" - வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரியில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
x
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரியில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். கோவை, தேனியின் மலை பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மிதமான மழை பெய்யும் என்றும் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டம் இருக்கும் என்று கூறிய புவியரசன், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 58 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்