தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது

தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
x
தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்து 643 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று அதிகபட்சமாக 4 ஆயிரத்து 894 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் . மேலும் 75 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. 

சென்னையில் மேலும் 1130 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று மேலும் ஆயிரத்து 130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 88 ஆயிரத்து 377 ஆக உயர்ந்து இருக்கிறது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில்  3ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 21 உயிரிழப்புகளும் , மற்ற மாவட்டங்களில் 54 உயிரிழப்புகளும் நிகழ்ந்து இருக்கிறது. Next Story

மேலும் செய்திகள்