சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - கைதான காவலர்கள், மருத்துவர்கள் வாக்குமூலம்

சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர்கள், மருத்துவர்கள் அளித்த வாக்குமூலத்தில் எந்த முரண்பாடும் இல்லை என மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பி குமார் தெரிவித்துள்ளார்.
x
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக  மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 4 நாட்களாக சாத்தான்குளத்தில் விசாரணை மேற்கொண்ட வந்த மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி குமார், இன்றைய தினம் மதுரை மத்திய சிறையிலடைக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 காவலர்களிடம் விசாரணை நடத்தினார். சிறை வளாகத்தில் உள்ள பிரத்யேக அறையில், 10 பேரிடமும் தனி தனியாக விசாரித்துள்ளார். சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, தற்போது வரை 30 பேரிடம் மனித உரிமை ஆணையம் டிஎஸ்பி குமார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. விசாரணைக்கு பிறகு மதுரை சிறைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவர்கள், கைதான காவலர்கள் அளித்த வாக்குமூலத்தில் முரண்பட்ட தகவல் இல்லை எனக் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்