சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ காவலில் 5 போலீசார் - பால்துரை ஜாமீன் மனு நாளை விசாரணை

சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ காவலில் உள்ள போலீசார் 5 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.
x
சிபிஐ காவலில் எடுக்கப்பட்ட இவர்கள் 5 பேருக்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டது. அப்போது அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனையில் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதனிடையே சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 5 பேரிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கைகளை சரிபார்க்கும் பணியிலும் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்