கொரோனா சமூக பரவலா? : "ஆய்வு குழு தேவை" - எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

கொரோனா சமூகப் பரவல் குறித்து முறைப்படி ஆய்வு மேற்கொள்ளத் தனியாக ஒரு வல்லுநர் குழுவை நியமிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திமுகதலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்
கொரோனா சமூக பரவலா? : ஆய்வு குழு தேவை - எதிர்க்கட்சி  தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
x
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக நகரங்கள் முதல் கிராமங்கள் வரை தொற்று பரவல் தீவிரம் அடைந்த நிலையிலும், சமூகப் பரவல் இல்லை என சொல்லிக் கொண்டிருப்பது, மக்களுக்கு விபரீதத்தை , உணர்த்தத் தவறும், ஆபத்தான போக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.

*ஆகையால் தொலைநோக்குச் சிந்தனையோடு, கொரோனா மருத்துவக்  கொள்கை ஒன்றை வகுத்துச் செயல்படுத்தி அனைத்து மாவட்டங்களிலும் நோய்ப் பரவலைப் போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

* அதேபோல், கொரோனா மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பற்ற முறையில் அகற்றுவதையும் அழிப்பதையும் முற்றிலும் தவிர்த்திட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

* அரசின் ஆக்கபூர்வமான செயல்திட்டம், ஊக்கமளித்தல் மட்டுமே இதுபோன்ற நோய் பேரிடர் காலத்தில் மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் என நம்புவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

* கொரோனா தவிர பிற நோயால் பாதிக்கப்படுவோரின் தடையில்லாத சிகிச்சைக்கு, பிரத்யேக செயல்திட்டம் உருவாக்கி, அதை செயல்படுத்த வேண்டும் எனவும்  இந்தச் சூழலை பயன்படுத்தி, காசநோய் போன்ற நோயை அறவே தமிழகத்திலிருந்து போக்கிட ஆக்கபூர்வமான செயல்திட்டத்தை உருவாக்கிட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்