கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய கடும் எதிர்ப்பு : கத்தியால் கையில் கிழித்து கொண்ட விவசாயி...

திருச்சி மாவட்டம், கீழ கல்கண்டார் கோட்டையில் அமைக்கப்பட உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 200-க்கும் மேற்பட்டோர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
திருச்சி மாவட்டம், கீழ கல்கண்டார் கோட்டையில் அமைக்கப்பட உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 200-க்கும் மேற்பட்டோர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, பேச்சு வார்த்தை நடத்தி அந்த திட்டம் குறித்து, ஆய்வு நடத்தி, திட்டம் ரத்து செய்யப்படும் என அறிவித்தார். அதனை ஏற்க்கொண்ட மக்கள் அங்கிருந்து
கலைந்து சென்றனர். இதனிடையே போராட்டத்தின் போது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ரவி என்கிற விவசாயி தான் வைத்திருந்த கத்தியால் தன்னை தானே உடலில் கிழித்துக்கொண்டார். இரத்தக்காயங்களோடு இருந்த அவரை உடனடியாக காவல் துறையினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.இதனால் சிறுது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது


Next Story

மேலும் செய்திகள்