அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவிப்பு

தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 6 நாட்கள் வேலை என்றும் காலை 10.30 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
x
கொரோனா காரணமாக 50 %  ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள கோப்புகளை, விரைந்து முடிக்க வேண்டியுள்ளதால் வாரத்தில் ஆறு  நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இன்று முதல் காலை 10.30 மணிக்குள் அரசு பணியாளர்கள் அலுவலகங்களுக்குள் வந்திருக்க வேண்டும் என, முதன்மை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அவர்கள் வருவதை அறிக்கை தயார் செய்து நாள்தோறும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்