தமிழகத்தில் மத்திய சுகாதார குழுவினர் 3 நாள் ஆய்வு - கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை

மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான மத்திய குழுவினர் தனது ஆய்வு பணியை சென்னையில் இன்று தொடங்கினர்.
x
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு, மத்திய அரசின் 7 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் மூன்று நாள் பயணமாக தமிழகத்திற்கு வந்தடைந்தனர். இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் சுகாதாரத் துறை உயரதிகாரிகளுடன் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் ஆலோசனை நடத்தினர். பின்னர் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்தனர். பிறகு புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் நேரடியாக ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து, இன்று மாலை 4.30 மணிக்கு தமிழகத்தில் அதிகம் பாதிப்புக்கு உள்ளான  10 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனை பங்கேற்க உள்ளனர்.நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்