தமிழகத்தில் மேலும் 2,710 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு- 62,087

தமிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
x
தமிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்து உள்ளது. இன்று மட்டும் ஆயிரத்து 358 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 37 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 794 ஆக உயர்ந்து உள்ளது. 27 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று 1,487 பேருக்கு கொரோனா - மொத்த உயிரிழப்பு - 623

சென்னையில் மேலும் ஆயிரத்து 487 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்து 752 ஆக உள்ள நிலையில் , சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 372 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 23 ஆயிரத்து 756 பேர் குணமடைந்து உள்ளனர். சென்னையில் கொரோனாவால் 623 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்