தமிழகத்தில் 2 வது நாளாக 2 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
x
தமிழகத்தில், ஜூன் 18ஆம் தேதி நேற்று ஒரே நாளில் 2141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,334 ஆக உயர்ந்துள்ளது. ஜூன் 10ஆம் தேதி ஆயிரத்து 927 பேர், ஜூன் 11ஆம் தேதி 1875 பேர், ஜூன் 12ஆம் தேதி 1982 பேர், ஜூன் 13ஆம் தேதி 1989 பேர், ஜூன் 14ஆம் தேதி 1974 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அடுத்தடுத்த நாளில் புதிய உச்சத்தை எட்டியது. ஜூன் 15ஆம் தேதி கொரோனா பாதிப்பு சற்று குறைந்து, 1843 பேருக்கும்,  ஜூன் 16ஆம் தேதி 1515 பேருக்கும் மட்டுமே கொரோனா பாதிப்பு என பதிவானது. ஆனால், அதற்கு அடுத்த நாளில் ஜூன் 17ஆம் தேதி 2174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு புதிய உச்சத்தை எட்டியது. ஜூன் 18ஆம் தேதி 2141 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுளனர்

ஜூன் 9ஆம் தேதி தமிழகத்தில் ஒட்டுமொத்தமான கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை நெருங்கிய நிலையில்,  ஜூன் 10ஆம் தேதி 36ஆயிரத்தையும், ஜூன் 11ஆம் தேதியும் 38ஆயிரத்தையும் கடந்தது.  ஜூன் 12ஆம் தேதி கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக 40 ஆயிரத்தை கடந்தது. ஜூன் 13ஆம் தேதி 42 ஆயிரத்தையும், ஜூன் 14ஆம் தேதி  44 ஆயிரத்தையும் ஜூன் 15ஆம் தேதி 46 ஆயிரத்தையும் ஜூன் 16ஆம் தேதி 48 ஆயிரத்தையும் கொரோனா பாதிப்பு  கடந்து புதிய உச்சத்தை தொடர்கிறது. ஜூன் 17ஆம் தேதி 50 ஆயிரத்தை கடந்த நிலையில், நேற்று ஜூன் 18ஆம் தேதி நிலவரப்படி, 52 ஆயிரத்து 334 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்  

32,241 ஆண்கள், 20,073 பெண்கள், 20 திருநங்கைகள் என மொத்தம் 52 ஆயிரத்து 334 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 3-இல் 2 பங்கு பாதிப்பு சென்னையில் மட்டும் உள்ளது. ஜூன் 18ஆம் தேதி நேற்று ஒரே நாளில் 1373 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும்  ஜூன் 17ஆம் தேதி வரை 35ஆயிரத்து 697 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 18ஆம் தேதி நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 373 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 37ஆயிரத்தை கடந்தது. 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்து 285 ஆகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு 2 ஆயிரத்து 155 ஆகவும் உள்ளது. சென்னையின் அண்டை மாவட்டமான காஞ்சிபுரத்தில் ஜூன் 18ஆம் தேதி 55 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டதால்  மொத்த பாதிப்பு, 945 ஆனது. கடலூர் மாவட்டத்தில் 646 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 843 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 500ஐ கடந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் 500ஐ நெருங்கியது. தமிழகத்தில் ஜூன் 18ஆம் தேதி நேற்று ஒரே நாளில் புதிதாக 1,017 பேர் குணமடைந்ததால், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 28,641ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை. இதனால் மொத்தம் 37 மாவட்டங்களில் 3 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை. மற்ற 34 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்கிறது

Next Story

மேலும் செய்திகள்