உயிரிழந்த இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர் - அணிவகுப்பு, அஞ்சலியுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

உயிரிழந்த இந்தோ-திபெத் பாதுகாப்பு படை வீரரின் உடல் அணிவகுப்பு மரியாதையுடன் சொந்த ஊரான ஹரியானாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது
உயிரிழந்த இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர் - அணிவகுப்பு, அஞ்சலியுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
x
மதுரை விமான நிலையத்தில் மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இந்தோ-திபெத் பாதுகாப்பு படை வீரரின் உடல், அணிவகுப்பு மரியாதையுடன் சொந்த ஊரான ஹரியானாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மூன்று நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து மதுரை வந்த 50 வயதான சுரேந்தர் சிங், விமான நிலையத்தில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, சொந்த ஊரான ஹரியானா மாநிலத்துக்கு அனுப்புவதற்காக மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு, இந்தோ-திபெத் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை போலீசார், அணிவகுப்பு மரியாதை நடத்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்