திண்டிவனம் பகுதியில் சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் வெங்கடேசன் என்பவருக்கும் 16 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
திண்டிவனம் பகுதியில் சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது
x
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் வெங்கடேசன் என்பவருக்கும் 16 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமான சிறுமி தற்போது  நிறைமாத கர்ப்பிணியாக  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அப்போது இவர் சிறுமி என்பது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில்,  போலீசார் வெங்கடேசன் மீது  போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்