மேட்டூர் அணையில் நீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையில் நீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
x
மேட்டூர் அணையின் வலதுகரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை மின்பொத்தானை அழுத்தி, முதலமைச்சர் பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார். இதையடுத்து 8 கண் மதகு வழியாக சீறிபாய்ந்த காவிரி நீரில், மலர்கள் தூவி முதலமைச்சர் வழிபட்டார். அணை திறப்பு நிகழ்ச்சியில், அமைச்சர்கள், பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள், விவசாய பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 8 ஆண்டுகளுக்குப் பிறகு உரிய காலமாக ஜூன் 12-ல் மேட்டூர் அணையின் 8 கண் மதகு பகுதியில் குறுவை சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலும் 12 மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதிபெறும் என டெல்டா விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்