"ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடம்" - தனியார் மருத்துவமனை அறிக்கை

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக சென்னை தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
x
திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக சென்னை தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2ஆம் தேதி, கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெ.அன்பழகனுக்கு வெண்டிலேட்டர் மூலம் தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ஜெ.அன்பழகனுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளதாகவும், சிறுநீரகம் மற்றும் இதயத்தின் செயல்பாடு மோசமான நிலையில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவரின் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க மருந்துகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்