"சென்னையின் 5 மண்டலத்தை கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றுங்கள்" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னையின் ஐந்து மண்டலத்தை மிகுந்த கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றி, அப்பகுதி மக்களுக்குத் தேவையான பொருட்களை அரசே வழங்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
சென்னையின் 5 மண்டலத்தை கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றுங்கள் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
சென்னையின் ஐந்து மண்டலத்தை மிகுந்த கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றி, அப்பகுதி மக்களுக்குத் தேவையான பொருட்களை அரசே வழங்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நோய்த்தொற்று  அதிகம் உள்ள பகுதியை தனிமைப்படுத்தி, ஓர் அரண் போல் தடுப்பு நடவடிக்கை எடுத்தால் தான் மக்களைக் காக்க முடியும் என தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். வெறுமனே, ஏதோ புள்ளிவிவரங்களைச் சொல்லி தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளாமல்,  அரசு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரணமாக மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  இப்போது தேவை சொல் அல்ல, செயல் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்