முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை

முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறலாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை
x
சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், நாள் ஒன்றுக்கு அனைத்து சேவைகளுக்குமான பொது வார்டுக்கு 5 ஆயிரம் ரூபாயும், அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவில் ஏ1, ஏ2-வுக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையும், ஏ3, ஏ4-வுக்கு 9 ஆயிரம் முதல் 13 ஆயிரத்து 500 ரூபாய் வரை தொகுப்பு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு  திட்ட  பயனாளிகள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக்களுக்கு எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது. நிர்ணயித்த கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்த வற்புறுத்தும் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மேலும் விவரங்கள் மற்றும் புகாருக்கு - 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் செய்தி குறிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

Next Story

மேலும் செய்திகள்