12ஆம் வகுப்பு தமிழ் வழி வேதியியல் தேர்வு - 3 மதிப்பெண் போனஸ் என தேர்வுத்துறை அறிவிப்பு
பன்னிரெண்டாம் வகுப்பு வேதியியல் தேர்வை தமிழ்வழியில் எழுதிய மாணவர்களுக்கு மூன்று மதிப்பெண் போனஸ் வழங்க தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அனைத்து விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு, இது குறித்து தேர்வுத்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், தமிழ்வழி வேதியியல் தேர்வு வினத்தாளில் 31 கேள்வியில், தவறான மொழிப்பெயர்ப்பு இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அந்தக் கேள்விக்குரிய மூன்று மதிப்பெண்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 31வது கேள்வியை மாணவர்கள் எழுத முயற்சி செய்திருந்தால் மூன்று மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அவ்வாறு எந்த விதமான முயற்சியும் செய்யவில்லை எனில், மதிப்பெண்கள் வழங்கப்படாது எனவும் அறிவியல் பாட ஆசிரியர்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
Next Story