ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை முதற்கட்ட அகழாய்வு பணி துவக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வு பணிகள் தொடங்கி உள்ளது. முதல் முறையாக மாநில அரசு சார்பாக இந்த அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
x
ஆதிச்சநல்லூரில் கடந்த மார்ச் மாதம் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட இருந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணியானது தொல்லியல் துறை அலுவலர் பாஸ்கரன் தலைமையில் நடைபெறுகிறது. இதேபோல், சிவகளையில் அகழாய்வு பணியினை தொல்லியல் துணை இயக்குநர் சிவானந்தம் தொடங்கி வைத்தார். சிவகளையை பொறுத்தவரை முதல் முறையாக அங்கு அகழாய்வு பணி நடைபெறுகிறது. ஆதிச்சநல்லூரில் தற்போது நடைபெறுவது 6ஆம் கட்ட அகழாய்வு பணியாகும்.Next Story

மேலும் செய்திகள்