அம்மா உணவகங்களில் இலவச உணவு தொடர்பான வழக்கு - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் விளக்கம்

தமிழகம் முழுவதும் 654 அம்மா உணவகங்கள் மூலம் நாள்தோறும் 7 லட்சம் பேருக்கு இலவச உணவு அளிக்கப்பட்டு வருவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அம்மா உணவகங்களில் இலவச உணவு தொடர்பான வழக்கு - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் விளக்கம்
x
ஊரடங்கு காரணமாக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு மூன்று நேரமும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினை தமிழகம் முழுவதும்,விரிவுபடுத்தக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும்  புஷ்பா சத்தியநாராயணா அமர்வில் விசாரனைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில்,தமிழகம் முழுவதும் உள்ள 654 அம்மா உணவகங்கள் ஒவ்வொன்றுக்கும், தினசரி  31 ஆயிரத்து 500 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், அதன்மூலம் 7 லட்சம் பேர் பயன்பெற்று வருவதாகவும் பதில் அளிக்கப்பட்டது. இது தவிர சமூக நலக் கூடங்கள், சமுதாயக் கூடங்கள் மூலமாகவும் உணவு சமைக்கப்பட்டு ஏழை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தை அடுத்து,மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவித்ததை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்