"தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய காரணம் முதலமைச்சர் எடுத்த முடிவுகள் தான்" - அமைச்சர் காமராஜ்

சரியான நேரத்தில் முதலமைச்சர் எடுக்கும் முடிவுகள் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவதற்கு உறுதுணையாக இருந்து வருவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
x
சரியான நேரத்தில் முதலமைச்சர் எடுக்கும் முடிவுகள் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவதற்கு உறுதுணையாக இருந்து வருவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, உள்ளிக்கோட்டை பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் நலிவடைந்த குடும்பத்தினருக்கு நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் காமராஜ் பங்கேற்று ஆயிரம் பயனாளிகளுக்கு நிவாரண தொகை வழங்கினார். பின்னர் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்று பற்றி மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், அரசு அறிவிக்கும் வரை சமூக இடைவெளி, கை கழுவுதல் போன்றவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்