அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவக்கம் - மொத்த மின் உற்பத்தி 1,440 மெகா வாட் ஆனது

சேலம் மாவட்டம் மேட்டூரில் கொரோனா தடை காரணமாக நிறுத்தப்பட்ட புதிய 600 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவக்கம் - மொத்த மின் உற்பத்தி 1,440 மெகா வாட் ஆனது
x
சேலம் மாவட்டம், மேட்டூரில் கொரோனா தடை காரணமாக நிறுத்தப்பட்ட புதிய 600 மெகாவாட் அனல் மின் நிலையத்தில்  மின் உற்பத்தி தொடங்கப் பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இறுதியில்  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் மின் தேவை குறைந்ததன் காரணமாக  840   மெகாவாட் அனல் மின்  நிலையத்தின் நான்காவது அலகு தவிர மற்றவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதே போல் புதிய 600 மெகாவாட் அனல் மின் நிலையத்தில்  மின் உற்பத்தி நிறுத்தப் பட்டன. இதனைத் தொடர்ந்து மேட்டூரில் பழைய மற்றும் புதிய அனல் மின் நிலையங்களில் இன்று முதல் அதன் மொத்த மின் உற்பத்தியான ஆயிரத்து 440 மெகாவாட் எடுக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்