கோயம்பேடு சந்தை இடமாற்றம்- முதலமைச்சர் ஆலோசனை

பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோயம்பேடு சந்தை இடமாற்றம்- முதலமைச்சர் ஆலோசனை
x
பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து தற்போது தயார் நிலையில் உள்ளன. நாளை தற்காலிக சந்தையை இயக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருமழிசையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம், சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது வியாபாரிகளின் கோரிக்கைள் குறித்து முதலமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மேலும் சந்தை அமைய உள்ள இடத்தின் வரைபடங்களை வைத்து, பல்வேறு தகவல்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

Next Story

மேலும் செய்திகள்