தியாகராஜர் குறித்து பேச்சு - கமலுக்கு ஜி.கே. வாசன் கண்டனம்

தியாகராஜ சுவாமிகள் குறித்து அவதூறு பேசியதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுக்கு வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தியாகராஜர் குறித்து பேச்சு - கமலுக்கு ஜி.கே. வாசன் கண்டனம்
x
திருவையாறு தியாக பிரம்ம மகோற்சவ சபா தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான அவர், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தவ வாழ்க்கை வாழ்ந்த மகான் தியாகராஜ சுவாமியை இழிவுப்படுத்தும் வகையில் கமலின் பேச்சு இருப்பதாக வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் மறைந்து 173 ஆண்டுகள் கடந்தாலும், தியாகராஜ சுவாமி உருவாக்கிய கீர்த்தனைகள் இன்றளவும் இசைகலைஞர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், தியாகராஜ சுவாமி குறித்த அவதூறு பேச்சுக்கு கமல் மன்னிப்பு கேட்பதோடு, அந்த கருத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்