மே 3-க்கு பின் திறக்கப்படுமா தொழில் நிறுவனங்கள்? - முதலமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனை

மே 3 ஆம் தேதிக்கு பின் தொழில் நிறுவனங்களை திறப்பது குறித்த ஆலோசனை கூட்டம் , முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
x
முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம், நிதிதுறை செயலாளர் கிருஷ்ணன், தொழிற்துறை செயலாளர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். மே 3 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமைக்கு பின் ஆரஞ்சு, பச்சை நிற மண்டலங்களில், தொழில்நிறுவனங்களையும், படிப்படியாக சிறு குறு நிறுவனங்களையும் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அவ்வாறு தொழில் நிறுவனங்களை அனுமதிக்கும் பட்சத்தில், அந்நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்