மதுரையில் கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி - பச்சிளம் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இல்லை

மதுரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணுக்கு பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
மதுரையில் கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி - பச்சிளம் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இல்லை
x
மதுரை மாவட்டம் தொட்டப்ப நாயக்கனூர் அருகே உள்ள  டி அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு  பிரசவ வலி ஏற்படவில்லை,
அந்த பெண்ணை  உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு ரத்தம் சளி  பரிசோதிக்கப்பட்டதில்  அந்த பெண்ணுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து அந்த கர்ப்பிணி பெண்  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. தாய்க்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் ,  குழந்தையின் ரத்தம், சளி பரிசோதனை செய்யப்பட்டது. அந்த குழந்தைக்கு நோய் தொற்று இல்லை என்று தெரிய வந்தும் 48 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதிலும் அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்