உழவன் இ-சேவையில் விளைபொருள் விற்பனை - வியாபாரிகளும் விருப்பம் தெரிவிக்கலாம் என யோசனை

உழவன் செயலியில் உள்ள இ - சேவையை பயன்படுத்தி விளைபொருட்களை விற்பனை செய்யலாம் என தமிழக விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது
உழவன் இ-சேவையில் விளைபொருள் விற்பனை - வியாபாரிகளும் விருப்பம் தெரிவிக்கலாம் என யோசனை
x
கொரோனா ஊரடங்கில் நிலவும் அசாதாரண சூழலிலும், விளைபொருட்கள் விற்பனை செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் உழவன் செயலில் உள்ள இ-சேவை மூலம், விளைபொருட்களை விற்பனை செய்ய தமிழக விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு மாவட்ட வியாபாரிகள், விவசாயிகளின் விளைபொருட்களை வாங்க செயலி மூலம் விருப்பம் தெரிவிக்கலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உடனடியாக வியாபாரிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரம் விவசாயிகளுக்கு உழவன் செயலியின் வாயிலாக தெரிவிக்கப்படும் என்றும் இதன் மூலம்  விவசாயிகள் பல்வேறு வியாபாரிகளை தொடர்பு கொண்டு தங்களது பயிர்களை விற்று வருவாய் ஈட்ட முடியும் என வேளாண்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்