முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை
x
ஊரக நகர பகுதிகளில் உள்ள வெளி மாநில தொழிலாளர்களின்  எண்ணிக்கையை கணக்கெடுத்து சமர்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்கியுள்ள இடங்களில் நிவாரண பொருள்கள் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேளாண் பணிகள் பாதிக்காத வண்ணம் விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்கள், இடுபொருள்கள் ஆகியவை தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், விளைபொருள்களை சந்தைக்கு கொண்டு செல்ல எந்த தடையும் இருக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

மக்கள் இயல்பு திரும்பும் வகையில், சிவப்ப மற்றும் ஆரஞ்ச் பகுதிகளில் உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு பச்சை பகுதிகளாக மாற்றிட போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் எந்த வித தங்குதடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நாள்தோறும் இருமுறை கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நியாயவிலைக்கடைகளில் மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருள்களை பெற்றுக்கொள்ள டோக்கன் வழங்கும் போது நேரம், நாள் ஆகியவற்றை அச்சடித்து வழங்க வேண்டும் என்றும் இதேபோல் நோய் தொற்று தடுப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டிய சென்னை, கோவை, மதுரை ,திருப்பூர், சேலத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த கீழ்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்ட்டுள்ளன.

இராயபுரம், திருவிக நகர் உள்ளிட்ட 6 மண்டலங்களில் மண்டலத்திற்கு ஒரு களப்பணி குழுவும், 9 மண்டலங்களில் 3 மண்டலத்திற்கு ஒரு களப்பணி குழுவும் நியமனம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பிடங்களில் தனிமைப்படுத்தகொள்ள வசதி இல்லாதவர்கள் அரசால் அமைக்கப்படும் மையங்களில் தங்கி இருக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

நகரும் கழிப்பறை வசதி கூடுதலாக ஏற்படுத்தப்படும் என்றும், நடமாடும் சோதனை வாகனங்கள் 10ஆக அதிகரிக்கப்படும் என்றும், அத்தியாவசிய பொருள்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்