கடலூர் மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று - உடன் இருந்த 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாக புட்டபர்த்தி சென்ற ஆறு பேர் ஆந்திர அரசின் அனுமதி பெற்று தனி காரில் ஆந்திராவிலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு வந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று - உடன் இருந்த 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு
x
ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாக புட்டபர்த்தி  சென்ற ஆறு பேர் ஆந்திர அரசின் அனுமதி பெற்று தனி காரில் ஆந்திராவிலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு வந்தனர். இவர்கள் ஆறு பேருக்கும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், 69 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் கடலூர் அண்ணா நகர், வண்ணாரப்பாளையம், ரங்கநாத நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சீல் வைத்து கண்காணித்து வருகின்றனர். கடந்த 10 நாட்கள் தொற்று எதுவும் இல்லாத நிலையில் தற்போது புதிதாக ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளதால் கடலூர் மாவட்டம் முழுவதும் மீண்டும் உஷார்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்