தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா - கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக உயர்வு

தமிழகத்தில் புதிதாக மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
x
தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 15 பேருக்கும் அரியலூரில் 2 பேருக்கும்....திண்டுக்கல், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், தஞ்சையில் 5 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், திருவள்ளூரில் 2 பேருக்கும், கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்