தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி, காலை பத்து மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
x
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி,  காலை பத்து மணியளவில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். இது குறித்து முதலமைச்சர் விளமளித்ததை அடுத்து, பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் முதலமைச்சரிடம் பிரதமர் கேட்டு கொண்டுள்ளார். மேற்கூறிய அனைத்தும் முழுமையாக செயல்படுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு உறுதி அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்