கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம் - பாதுகாப்பு சாதனம் தயாரிக்கும் இந்தியன் ரயில்வே

கொரோனா நோய்த்தொற்றை தடுக்க பாதுகாப்பு சாதனங்களை இந்தியன் ரயில்வே தயாரிக்க துவங்கி உள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம் - பாதுகாப்பு சாதனம் தயாரிக்கும் இந்தியன் ரயில்வே
x
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக, நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும் சாதனங்களான முக கவசம், கையுறை, கைகளை தூய்மையாக்கும் கிருமி நாசினி ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது.

ரயில்வே துறை சார்பில் ஏற்கனவே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் பெருமளவில் விற்கப்பட்டு வருகின்றன.

இதை கருத்தில் கொண்டு, ஐஆர் என்ற பெயரில் நோய்த்தொற்று பாதுகாப்பு சாதனங்களை தயாரிப்பதில் ரயில்வே முனைப்பு காட்டி வருகிறது.

ஏற்கெனவே, மேற்கு வங்க மாநிலம் அசான்சோல் அருகே உள்ள அந்தால் டீசல் என்ஜீன் தயாரிப்புத் தொழிற்சாலையில் கைகளை தூய்மையாக்கும் கிருமி நாசினி 500 லிட்டர் அளவுக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. ஃபிரோஸ்பூரில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் கைகளை தூய்மையாக்கும் கிருமி நாசினியை லிட்டருக்கு ₹ 310 என்ற விலையில் தயாரிக்க தொடங்கியுள்ளது.

நோய்த்தொற்று பாதுகாப்புச் சாதனங்களுக்கான மூலப் பொருட்களை பெற்று பிற ரயில் பெட்டி தொழிற்சாலைகளிலும் பெருமளவில் உற்பத்தி செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

2-ஆம் உலகப்போர் நடைபெற்றபோது திருச்சி, ஜமால்பூர், அந்தால், காஞ்சிராபாரா  ஆகிய நகரங்களில் அமைந்துள்ள ரயில்வே தொழிற்சாலைகளில் ஆயுதம் தாங்கி வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், கையெறி குண்டுகள் போன்றவை தயாரிக்கப்பட்டன.
அப்போதைய ஆங்கிலேய விமானப்படை விமானங்களையும் பழுது பார்க்க இந்த தொழிற்சாலைகள் பயன்படுத்தப்பட்டன.

தற்போது சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை [ஐசிஎஃப்], துப்பாக்கித் தெறிகுண்டுகளை ஏவும் வாகனங்களை தயாரிக்கும் திறன் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்