மனைவியுடன் தம்பிக்கு முறையற்ற உறவு - தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்

திண்டுக்கல் அருகே தன் மனைவியுடன் முறையற்ற உறவில் இருந்த தம்பியை அண்ணனே வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கம்பளியம்பட்டியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவர் புதுச்சேரியில் இடியாப்ப கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சின்னம்மாள். வேலைக்காக கணவர் வெளியூர் சென்ற நிலையில் கணவரின் சித்தி மகனான பழனிசாமியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது, 

இதை உறவினர்கள் பலமுறை சொக்கலிங்கத்திடம் கூறவே அவரும் இரண்டு பேரையும் அழைத்து பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் உறவை விட மறுத்த பழனிசாமி, தன் அண்ணியான சின்னம்மாளை அழைத்துச் சென்று 15 நாட்கள் வேறு இடத்தில் தங்க வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சொக்கலிங்கம், பழனிச்சாமியை கண்டித்துள்ளார், 

ஆனாலும் கூட சின்னம்மாள் உடனான உறவை கைவிட பழனிசாமி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சொக்கலிங்கம், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தன் தம்பியை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த பழனிசாமியை மீட்ட உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கொலை  செய்த அரிவாளை வீசியெறிந்த சொக்கலிங்கம், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் மீது கொலை வழக்கு பதிவு  செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முறையற்ற உறவால் தம்பியை அண்ணனே வெட்டிக் கொன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்