"கொரோனா அறிகுறி உள்ளவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் " - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
x
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்றது. சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், பேரிடர் மேலாண்மை  துறை ஆணையர்  ராதாகிருஷ்ணன் மற்றும்  சுகாதார துறையை சேர்ந்த அதிகாரிகள், மருத்துவமனை தலைவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பீலா ராஜேஷ், கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்