"என்னைப் பார் யோகம் வரும்" - கழுதையை குறிவைத்து திருடும் கும்பல்

'என்னை பார் யோகம் வரும்' என்ற வாக்கியத்துடன் கழுதை படத்தை சிலர் வைத்து இருப்பார்கள். ஆனால் ராமேஸ்வரத்திலோ உண்மையிலேயே கழுதையை திருடும் கும்பல், அதை விற்று காசு பார்த்து வருகிறது.
x
ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் கழுதைகளை வைத்து மணல் அள்ளுவது, தோட்டங்களுக்கு உரங்களை எடுத்துச் செல்வதை, அப்பகுதிவாசிகள் பழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக மலைப்பிரதேசம் மற்றும் கர்நாடகா பகுதிக்குச் சென்று 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து கழுதைகளை வாங்கிவந்து அதை வைத்து தங்கச்சிமடம் பகுதியில் உள்ளவர்கள் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தங்கள் வேலை முடிந்தவுடன் கழுதைகளை மெய்வதற்காக வீட்டின் அருகே விடப்படும்போது இரவு நேரங்களில் கழுதைகளை வாகனம் மூலமாக சிலர் கடத்தி செல்வதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறாக கொண்டு செல்லப்படும் கழுதைகள் ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு உணவுக்கு பயன்படுத்துவதாகவும் கழுதை உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடன் வாங்கி, கழுதையை வாங்கி தொழில் நடத்தி வரும் தங்களிடமிருந்து கழுதையை திருடிச் செல்லும் கும்பலை போலீசார் பிடிக்க வேண்டும் என்று கழுதை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 'என்னை பார் யோகம் வரும்' என்ற வாக்கியத்துடன் கழுதை படத்தை சிலர் வைத்து இருப்பார்கள். ஆனால் ராமேஸ்வரத்திலோ உண்மையிலேயே கழுதையை திருடும் கும்பல், அதை விற்று காசு பார்த்து வருகிறது.  


Next Story

மேலும் செய்திகள்