என்.பி.ஆர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றன - முதலமைச்சர்

என்.பி.ஆர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுவதாக முதலமைச்சர் குற்றச்சாட்டி உள்ளார்.
x
சட்டபேரவையில், என்.பி.ஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார். தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டதால், அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு கண்டனம் தெரிவித்தார். பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிறுபான்மையின மக்கள் மத்தியில் எதிர்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார். எந்த இடத்தில் பாதிப்பு என்று சொன்னால், அதற்கு பதிலளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்த முதலமைச்சர், என்.பி.ஆர் விவகாரத்தில் மக்களுக்கு,  எதிர்கட்சிகள் உண்மையை எடுத்துக் கூற வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், பதற்றமான சூழலை உருவாக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்