சி.ஏ.ஏ. குறித்த சந்தேகங்களை களைய இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சிறப்பு விளக்கக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது.
x
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சிறப்பு விளக்கக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இஸ்லாமிய தலைவர்களுக்கு, அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் சண்முகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாளை மாலை 4 மணிக்கு, தலைமை செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான தங்கள் கருத்துக்களை, இந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கலாம் என்று, தலைமை செயலாளர் சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்