"பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்" - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
x
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை குறைவது  பொருளாதார வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமையும் என்றும் சர்வதேச அளவில் விலை உயரும்போது, அவற்றின் விலையை உயர்த்தும் அரசு, தற்போது குறைக்கக் கூடாதா? என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்