5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அரசாணை ரத்து தொடர்பான வழக்கு - ஜூன் முதல் வாரத்திற்கு விசாரணை ஒத்திவைப்பு

தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய அரசு சார்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அரசாணை ரத்து தொடர்பான வழக்கு - ஜூன் முதல் வாரத்திற்கு விசாரணை ஒத்திவைப்பு
x
தமிழகத்தில்  5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய அரசு சார்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தப்போவதில்லை என  மாநில அரசு தெரிவித்துள்ளதாகவும், எனினும் பதிலளிக்க கால அவகாசம் தேவை என மத்திய அரசு தரப்பில் கோரப்பட்டது. இதனையடுத்து விசாரணையை  ஜூன் முதல் வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்